உலக இயற்கை பாதுகாப்பு தினம் மற்றும் உலகக் கல்லீரல் அழற்சி தினம் கடைப்பிடிக்கப்பட்டது!!

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக இயற்கை பாதுகாப்பு தினம் மற்றும் உலகக் கல்லீரல் அழற்சி தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை ஜீலை 29

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக இயற்கை பாதுகாப்பு தினம் மற்றும் உலக கல்லீரல் அழற்சி தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும்பொழுது;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உலக இயற்கை பாதுகாப்பு தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28 அன்று கொண்டாடப்படுகிறது. இயற்கை வளங்களை பாதுகாத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களின் சிவப்புப் பட்டியலின்படி, பல்லாயிரக்கணக்கான விலங்கு மற்றும் தாவர இனங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான காடழிப்பு, வாழ்விட இழப்பு, அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை மற்றும் பல காரணிகளால் நமது இயற்கை சார்ந்த அமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. இயற்கை வளங்களை பாதுகாக்க
மரங்களை நடுதல் மற்றும் காடுகளைப் பாதுகாத்தல்.நீரைச் சேமித்து வீணாக்குவதைத் தவிர்த்தல்.நெகிழி பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டும்.

உலக கல்லீரல் அழற்சி தினம்
உலக கல்லீரல் அழற்சி தினம் (World Hepatitis Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 அன்று அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் கல்லீரல் அழற்சி நோயின் ஆபத்துகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது என்று பேசினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts