ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மடிகட்டி வளைகாப்பு மற்றும் சீர்வரிசை விழா!!

கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில், ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மடிகட்டி வளைகாப்பு மற்றும் சீர்வரிசை விழா, நிலவேம்புச் சித்தர் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள் தலைமையில் பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முதலில், ஸ்ரீ நாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், கோ பூஜை, அஸ்வத்த பூஜை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, வளைகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ நாகசக்தி அம்மனுக்கு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன.

இதில், குழந்தைப் பேறு வேண்டி வந்த 35 தம்பதிகள், தங்களின் சீர்வரிசை தட்டுகளுடன் கலந்து கொண்டு மடிகட்டி வளைகாப்பு பூஜையில் பங்கேற்றனர்.

அப்போது, “இந்த பூஜையில் கலந்து கொண்ட அனைத்து தம்பதிகளுக்கும் ஓராண்டுக்குள் குழந்தைப் பாக்கியம் கிடைக்க வேண்டும்” என்று நிலவேம்புச் சித்தர் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள் அருளாசி வழங்கினார்.

மேலும், விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் லட்சுமி கடாட்சம், சௌபாக்கியம், ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமை மற்றும் வாழ்வில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கி, வளமான வாழ்க்கை அமைய இறைவனை வேண்டி ஆசீர்வதித்தார்.

இந்த ஆன்மிக நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு நாகசக்தி அம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts