கோவையில் தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு திருவிழா!

30 வது ஆண்டாக நடைபெறும் இதில் பள்ளி மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!!

கோவை:வேலை வாய்ப்புகளில் கோ கோ விளையாட்டிற்கு முன்னுரிமை வழங்க இந்திய கோ கோ வீரர் சுப்ரமணியம் கோரிக்கை.

கோவையில் 30 வது ஆண்டாக தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு விளையாட்டு கழகம் சார்பாக நடைபெற்ற என்.ஜி..இராமசாமி சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்.உற்சாகமாக பங்கேற்றனர்.

கோவையில் தியாகி என்.ஜி. இராமசாமி நினைவு விளையாட்டு கழகம் சார்பாக தியாகி என்.ஜி. இராமசாமி நினைவு சுழற்கோப்பை–2026″ மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பி.எஸ்.ஜி.சர்வஜன பள்ளி விளையாட்டு மைதானத்தில் இரண்டு, நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டுத் திருவிழாவில், கோவை மாவட்டத்தின் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

முன்னதாக போட்டிகளை விளையாட்டு கழக நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.

இந்த சுழற்கோப்பை போட்டிகளில் கபடி, வாலிபால், கோ-கோ, த்ரோ பால், கூடைப்பந்து மற்றும் பூப்பந்து ஆகிய ஆறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு தனித்தனியாக 18 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருவதால்,பிரம்மாண்ட மைதானத்தில்,விறுவிறுப்பான ஆட்டங்கள் நடைபெற்றன.

துவக்க விழாவில் கலந்து கொண்ட இந்திய கோ கோ அணி வீர்ரும் கோ கோ உலக சாம்பியன் போட்டியில் தங்க பதக்கம் வென்ற வீரர் சுப்ரமணியம் பேசுகையில்,தற்போது கோ கோ விளையாட்டில் மாணவ,மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும்,மற்ற விளையாட்டுகளுக்கு வேலை வாய்ப்புகளில் முன் னுரிமை வழங்குவது போல கோ கோ விளையாட்டிற்கும் முன்னுரிமக வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts