
கோவையில் இரண்டாவது முறையாக நடைபெறும் இதில் தமிழகம்,கேரளா,கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க உள்ளதாக முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு இந்தியா மட்டுமின்ற ஆப்ரிக்க நாடுகளிலும். மாற றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் இரண்டாவது முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை மூட்டு வழங்குவதற்கான அளவீட்டு முகாம் கடந்த மே மாதம் நடைபெற்றது..
இந்நிலையில் அளவீடு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கை மூட்டுகளை பொருத்துவதற்கான முகாம்,ஆகஸ்ட் 9 ந்தேதி,சோமையாம்பாளையம் கே.என்.ஜி.புதூர் பகுதியில் உள்ள மகேஸ்வரி பவன் அரங்கில் நடைபெற உள்ளது.
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு ஆர்.எஸ்.புரம் இராஜஸ்தானி அரங்கில் நடைபெற்றது.
இதில், முகாம் ஒருங்கிணைப்பாளர் அச்சால் சிங் பட்டீ (Achal Singh Bhati) மற்றும் சமூக செயற்பாட்டாளர் சந்தோஷ் முந்த்ரா ஆகியோர் கூறுகையில்,
இந்த முகாமில்,ஜப்பான் – ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முப்பரிமாண தொழில் நுட்ப (3D Printed Narayan Modular) செயற்கைக் கால் மற்றும் கைகள் தேர்ந்த மருத்துவர்களை கொண்டு பொருத்த உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த முகாம் மாட்ரூ ஸ்ரீ சாந்தாபென் திரிபுவெந்தாஸ் பட்டேல் (Matrushree Shantaben Tribhuvandas Patel Charitable Trust) அறக்கட்டளையுடன் இணைந்து நாராயண் சேவா சன்ஸ்தான் நடத்துவதாக தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.





