
கோவை, ஆகஸ்ட் 8: சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், நிர்மலா மாதா கான்வென்ட் பள்ளி – ICSE/ISC சார்பில் கோவைபுதூர் A மைதானத்தில் இன்று காலை மினி மாரத்தான் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
“Say No to High Beam – உயர் ஒளியைத் தவிர்ப்போம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வை பள்ளியின் முதல்வர் சகோதரி மேபிள் மற்றும் பள்ளியின் மேலாளர் சகோதரி விமலா ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
இதில் சிறப்பு விருந்திரனாக குனியமுத்தூர் காவல்துறை உதவி ஆய்வாளர் தாமரை கண்ணன் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, “Say No to High Beam – உயர் ஒளியைத் தவிர்ப்போம்” என்ற கருப்பொருளில் இருசக்கர வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
அதனை, தொடர்ந்து நடைபெற்ற சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தானை கோவைப்புதூர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் ஜீவானந்தம் கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவைபுதூர் மைதானத்தில் தொடங்கிய இம்மரத்தான் கோவைபுதூர் ஆர்டிஓ சாலை வழியாக 3 கிலோமீட்டர் வரை நடைபெற்றது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இம்மாரத்தான், பொறுப்பான வாகன ஓட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தியது.
இந்நிகழ்விற்கு ஒத்துழைப்பு தந்த, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரொசாரியோ ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், காவல்துறை, தன்னார்வலர்கள், மற்றும் பொதுமக்களுக்கு பள்ளி நிர்வாகம் நன்றி தெரிவித்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஜான்சன் மூணாறு





