ஒன்றிய அரசின் விவசாயிகள்,தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து மறியல் போராட்டம்!!

ஒன்றிய அரசின் விவசாயிகள்,தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து
இன்று விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விவசாயிகளை பாதிக்கும் இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்….

விவசாய விளை பொருளுக்கு எம்எஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி கட்டுப்படியான விலை வழங்கிடு….

விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்…‌
100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் 200 நாள் வேலையும் ரூபாய் 700 சம்பளமும் வழங்கு….

தொழிலாளர்கள் உரிமை பறிக்கும் நான்கு தொகுப்பு சட்டங்களை ரத்து செய்….

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் நடைபெறும் மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று விளாத்திகுளத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொருளாளர் கே பி பெருமாள் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினுடைய மாவட்டச் செயலாளர் புவிராஜ், இந்திய தெழிற்சங்க மையம் ஜோதி, ராமர் , சூசை ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) மாவட்ட பொருளாளர் பிச்சை, ஏஐகேஎம் சார்பில் சண்முகம் பெருமாள், விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் தாலுகா செயலாளர் மலைக்கனி, பொருளாளர் மகாராஜன் நிர்வாகிகள் ராமலிங்கம், அமிர்தராஜ், பத்மாவதி, அமுதா, செல்வி, விவசாய தொழிலாளர் சங்கம் தாலுகா செயலாளர் முத்து மல்லம்மாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயலட்சுமி உள்ளிட்ட மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 46 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts