
கோவை: இன்றைய இளைய சமுதாயத்தைப் சீரழிக்கும் போதைப்பாதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கோவை கல்லூரி மாணவர்கள் கையில் எடுத்த போதைக்கு எதிரான போராட்டம் இப்போது ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கல்லூரி மைதானத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றுபட்டு நின்று SAY NO TO DRUGS என்னும் பிரம்மாண்ட விழிப்புணர்வு வடிவத்தை உருவாக்கி அசத்தினர். இளைஞர்களின் இந்த எழுச்சிமிக்கப் புகைப்படத்தை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்துச் சமர்ப்பித்தார்.
மாணவர்களின் இந்தத் தீவிர முயற்சியையும் சமூகப் பொறுப்பையும் பார்த்த முதலமைச்சர் அவர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
முதலமைச்சரிடம் புகைப்படத்தைக் காண்பித்து அமைச்சர் கே. விக்னேஷ் பாராட்டுப் பெற்ற தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்







