
கோவை, ஆக.17
கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் 10-வது ஆண்டு தடகளப் போட்டி-2026, கோவை நேரு விளையாட்டு அரங்கில் இன்று விமரிசையாகத் தொடங்கியது. ஆக.17 முதல் 19 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் என். கண்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
ஒலிம்பிக் கொடியை, கல்லாறு
சச்சிதானந்தா பள்ளி செயலாளர்
டாக்டர் கவிதாசன் ஏற்றினார்.
சஹோதயா கொடியை,
சஹோதயா கூட்டமைப்பு
துணைத் தலைவர் மகேஷ் நாராயணன் ஏற்றினார்.
விவேகானந்தா அகாடமி மாணவர்களின் பாரம்பரிய வரவேற்பு மற்றும் பேண்ட் வாத்திய முழக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில், முப்படைகளை பிரதிபலிக்கும் வகையில் பள்ளிகளின் மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, முன்னணி இளம் தடகள வீரர்களால் விளையாட்டு ஜோதி ஏந்தி வரப்பட்டது.
இத்தடகளப் போட்டிகள் 12, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளிலும், 6 முதல் 10 வயது வரையிலான சிறார்களுக்காக ‘கித்தீஸ் மீட்’ என்ற பிரிவிலும் நடத்தப்படுகின்றன. ஓட்டப்பந்தயம் மற்றும் பல்வேறு களப் போட்டிகள் என 3 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற உள்ளன.
கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் கிரிஷ் ஈஸ்வரன் தலைமையில், துணைத் தலைவர் மகேஷ் நாராயணன், செயலாளர் எஸ். பத்மநாபன், பொருளாளர் உமா மகேஸ்வரி, இணைச் செயலாளர் எய்லீன் ஜெத்ரோ மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஸ்மிதா, தீபாவதி ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
மாணவர்களிடையே விளையாட்டுத் திறன், ஒழுக்கம் மற்றும் குழு உணர்வை வளர்க்கும் நோக்கில் நடைபெறும் இப்போட்டிகள் வரும் ஆக. 19ம் தேதி வரை நடைபெறுகின்றன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.







