தமிழ் புலிகள் கட்சி சார்பில் விளாத்திகுளத்தில் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் விளாத்திகுளம் தொகுதி மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒண்டிவீரனின் நினைவை போற்றும் வகையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது வீரத்தையும், சமூகத்திற்காக ஆற்றிய பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்ச்சியில் தமிழ் புலிகள் கட்சி துணைச் செயலாளர் கருப்புராஜா, புதூர் ஒன்றிய செயலாளர் வெள்ளைவேந்தன், கிளைச் செயலாளர்கள் பால்பாண்டி, மாரிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக ஒன்றிய செயலாளர் பால்ராஜ், திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட துணைத் தலைவர் முனியசாமி, அகில இந்திய பட்டியல் இளைஞர் அமைப்பு தலைவர் வெள்ளைச்சாமி, தாலுகா செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒண்டிவீரனின் நினைவுக்கு மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts