
கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா : செப்டம்பர் 13 ந்தேதி நடைபெற உள்ள இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள விழா கமிட்டியினர் அழைப்பு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது.
கோவை சுலூர் ஆர்.வி.எஸ். கல்வி, மருத்துவ, விவசாய, பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக நடைபெற உள்ள விழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ஆர்.வி.எஸ்.டிரஸ்ட் அலுவலகத்தில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில்,காமாட்சி புரி ஆதீனம் சிவலேங்கேஸ்வர சாமிகள் மற்றும் ஆர்.வி.எஸ். கல்வி, மருத்துவ, விவசாய, பண்பாட்டு அறக்கட்டளை தலைவர் கே.வி்.குப்புசாமி ஆகியோர் பேசினர்.கோவை குமரன் கோட்டம் அறுபடைவீடு அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வேள்விச்சாலை நிகழ்வுகள் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.00 மணிக்கு விநாயகர் வழிபாடு, நவக்கிரக வேள்வி, மகாலட்சுமி பூஜை மற்றும் வாஸ்து சாந்தியுடன் தொடங்குகின்றன.
தொடர்ந்து செப்டம்பர் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கால வேள்வி பூஜைகளும், மருந்து சாற்றுதல் நிகழ்வும் நடைபெறவுள்ளன.
சிகர நிகழ்வான திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் சுபமுகூர்த்த வேளையில் மிக விமர்சையாக நடைபெற உள்ளது.
விழா நிறைவில் காலை 11.30 மணி முதல் வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்படும்.
இதில் ஆன்மீக அன்பர்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி அருள் பெற வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சந்திப்பின் போது சூலூர் சின்னச்சாமி மற்றும் விழா கமிட்டியினர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.






