ஆபத்தை உட்கொள்ளாத பயணம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தாரின் வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுவதும் ஆபத்தான முறையில் பயணம் செய்வதும் பலமுறை வால்பாறை காவல் அதிகாரி மற்றும் போக்குவரத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்தும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏதேனும் விபத்துக்கள் ஏற்படும் முன்னே இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.  டாக்டர் வாகனங்களிலும்  லோடிங் வாகனங்களிலும் ஆட்களை ஏற்றுவதும் வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு எஸ்டேட் வாகனங்களில் பரிசோதனை செய்வதில்லை எஃப் சி இன்சூரன்ஸ் டேக்ஸ் சரிவர அமைப்பதில்லை இதனைக் கண்டும் காணாமல் செல்கிறார்கள் போக்குவரத்து அதிகாரிகள். ஒவ்வொரு எஸ்டேட் பகுதிகளிலும் விபத்துக்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆகையால் இது போன்ற தவறுகளை செய்வதற்கு முன்னே நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள், வியாபாரிகள் கூறி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

– திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts