9-ம் வகுப்பு மாணவனின் யோசனையில் உருவானஹிட் லேர்ன் செயலி துவக்கவிழா!!

கோவை: 9-ம் வகுப்பு மாணவன் ஹரிஹரனின் யோசனையில் உருவான ஹிட் லேர்ன் செயலி
மாணவனின் கற்றல் சிரமத்திலிருந்து பிறந்த ஏஐ கற்றல் செயலியாக இது அமைந்துள்ளது இதன் துவக்கவிழா கோவையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை, மருதமலை சாலையில் உள்ள, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று, செய்தியாளர்களை சந்தித்து பேசிய 9ம் வகுப்பு பயிலும் மாணவரான ஹரிஹரன் கூறியதாவது…
திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் தான், 8-ம் வகுப்பு விடுமுறையின்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மீது அதிக ஆர்வம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கோவையில் உள்ள ஹோம் ஐடியாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் கோடிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கற்கத் தொடங்கினேன்.

அப்போது, தனது சொந்த கற்றல் அனுபவத்தில் இருந்த ஒரு சிக்கலை நான் அடையாளம் கண்டேன்
டியூஷன் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருப்பது ஒருபுறம், படிக்கும்போது சந்தேகம் ஏற்பட்டால், அந்த நேரத்தில் உடனடியாக விளக்கம் பெற முடியாதது மறுபுறம்,சந்தேகம் வரும் நேரத்தில் உடனடியாகக் கேட்டு விளக்கம் பெறக்கூடிய ஒரு ஏஐ இருந்தால் எப்படி இருக்கும்?”
என்ற சிந்தனை தனக்கு ஏற்பட்டது.

அதிலிருந்து, மாணவர்கள் தாங்களாகவே பாடங்களைக் கற்றுக்கொண்டு, புரியாதவற்றை குரல் மூலம் கேட்டு உடனடியாக விளக்கம் பெறக்கூடிய ஒரு கற்றல் செயலியை உருவாக்க வேண்டும் என்ற யோசனை தனக்கு ஏற்பட்டது. தனது யோசனையை அடிப்படையாகக் கொண்டு, தான், கோடிங் கற்ற நிறுவன தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து செயலியின் தொழில்நுட்ப அம்சங்களை உருவாக்கியுள்ளதாகவும்,

தனது தேவையை விளக்குவது, செயலி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் பற்றிய கருத்துகளைப் பகிர்வது, அதன் உருவாக்கப் பயணத்தைப் புரிந்துகொள்வது என, ஒரு யோசனை தொழில்நுட்பத் தயாரிப்பாக மாறும் செயல்முறையிலும் அவர் பங்கேற்ற தாகவும் தெரிவித்தார்.
தனது ஆரம்ப நிலை சிந்தனையே தற்போது ஹிட் லெர்ன் செயலியாக உருவாகியுள்ளது. எனவும், ‘இந்த செயலியில், மாணவர்கள் தங்களது வகுப்பைத் தேர்வு செய்து கற்றல் வீடியோக்களைப் பார்க்கலாம் எனவும், பாடம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால், அதை குரல் மூலம் கேட்டு ஏஐ உதவியுடன் விளக்கம் பெறலாம் எனவும், மாணவர்கள் கற்றுக்கொண்டதைச் சோதிக்கும் வகையில் வினாடி வினாக்கள் மற்றும் புதிர்களும் நடத்தி,வாய்ஸ் டு வாய்ஸ் கேள்வி–பதில் வசதி, பல்மொழி ஆதரவு, ஏஐ அடிப்படையிலான கற்றல், ஊடாடும் மதிப்பீடுகள், மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வசதி உள்ளிட்ட அம்சங்களும் இதில் புகுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இது மாணவர்களுக்கு கற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஒரு சிறந்த செயலியாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts