கோவையில் கிரிஸ்பி க்ரீம் டோனட் விற்பனை நிலையங்கள் தொடக்கம்!!

அமெரிக்காவின் பிரபல டோனட் நிறுவனமான கிரிஸ்பி க்ரீம், கோவையில் புரூக்ஃபீல்ட்ஸ் மால், ப்ரோசோன் மால் மற்றும் கோவை விமான நிலையம் ஆகிய மூன்று இடங்களில் தனது விற்பனை நிலையங்களைத் தொடங்கியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விற்பனை நிலையங்கள் மூலம், ஸ்விக்கி மற்றும் ஸோமாட்டோ வழியாகவும் கோவை முழுவதும் டோனட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

கிரிஸ்பி க்ரீம் நிறுவனத்தின் இந்திய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கோவையில் இந்த விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் புதிய உணவு அனுபவங்களுக்கான ஆர்வம் மற்றும் வளர்ந்து வரும் கஃபே கலாச்சாரம் ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இங்கு டோனட்களுடன் புதிதாகத் தயாரிக்கப்படும் காபி, மில்க்ஷேக்குகள் மற்றும் குளிர்பானங்களும் விற்பனை செய்யப்பட உள்ளன.

புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் நடைபெற்ற தொடக்க விழாவில் ரிப்பன் வெட்டுதல், குத்துவிளக்கு ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாடிக்கையாளர்களுக்கு இலவச டோனட்களும் வழங்கப்பட்டன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது தேசிய மாநாடு: ‘உணவு மற்றும் ஊட்டச்சத்து – யாரையும் விட்டுவிடக் கூடாது’ என்ற கருப்பொருளில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

Read More »