
கோவை : ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவன ஆண்டு விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 19-ம் தேதி வரை நடைபெறும் இதில்,ஏராளபான சிறப்புச் சலுகைகள் வழங்க இருப்பதாக – நிர்வாக இயக்குநர் வினோத் தகவல்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் கார்ஸ் வளாகத்தில், ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவனத்தின் ஆண்டு விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மேளா அக்டோபர் 10-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது.
இந்த விற்பனை மேளாவில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கார் விற்பனையாளர்களின் 300-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறிய ரக கார்கள் முதல் உயர்தர கார்கள் வரை பல்வேறு வகையான கார்கள், ரூ.50 ஆயிரம் முதல் பல்வேறு விலை வரம்புகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கார் வாங்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் கார் பிரியர்கள் தங்களது தேவைக்கும், வரவு செலவுத் திட்டத்திற்கும் ஏற்ற கார்களை நேரில் பார்வையிட்டு தேர்வு செய்யும் வகையில் இந்த மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட காரை மாற்றிக் கொள்ளும் வசதியும், தங்களது காரை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தும் ‘பார்க் அண்ட் செல்’ வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், வாகன ஆவணங்களைச் சரிபார்த்தல், வங்கிக் கடன் பெறுவதற்கான உதவி உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக, தமிழகம் முழுவதும் இலவசமாக உரிமையாளர் பெயர் மாற்றம் செய்து தரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சாய் கார்ஸ் ஆண்டு விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இந்த விற்பனை மேளாவில், வாடிக்கையாளர்களுக்காக ஏராளமான சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 19-ம் தேதி வரை நடைபெறும் இந்த மேளா குறித்த,மேலும் விவரங்களுக்கு: 7092920021 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.






