தேசிய இசைப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து கோவை சி.எஸ். அகாடமி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


கோவை: தேசிய அளவிலான யமஹா இசைப் போட்டியில், கோவை சி.எஸ். அகாடமி பள்ளியின் இசைக்குழுவான சி.எஸ். ஹவுலர்ஸ் (CS Howlers) இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தியா முழுவதும் இருந்து 270-க்கும் மேற்பட்ட பள்ளி இசைக்குழுக்கள் பங்கேற்ற இப்போட்டியில், ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் முன்னிலையில் இசை நிகழ்த்தி மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்குழு, பல்வேறு போட்டிச் சுற்றுகளைக் கடந்து தேசிய அளவில் முதல் 20 இசைக்குழுக்களில் ஒன்றாகத் தேர்வானது. தொடர்ந்து இறுதிப் போட்டியில் முதல் ஐந்து அணிகளில் இடம்பிடித்து, இரண்டாம் இடத்தை வென்றது. இசைப் பயணத்தைத் தொடங்கியபோது இக்குழுவின் மாணவர்கள் 11 வயதுடையவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே Furtados Band-It தேசிய அளவிலான இசைப் போட்டியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள இக்குழு, 2025-ஆம் ஆண்டு GSIS Class of Chords போட்டியில் இரண்டாம் இடத்தையும், 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற அதே போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.

தேசிய அளவிலான யமஹா இசைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள சி.எஸ். ஹவுலர்ஸ் மாணவர்களின் சாதனை, அவர்களின் இசைத் திறமைக்கும், முறையான பயிற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாக அமைந்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது தேசிய மாநாடு: ‘உணவு மற்றும் ஊட்டச்சத்து – யாரையும் விட்டுவிடக் கூடாது’ என்ற கருப்பொருளில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

Read More »