ஆனைமலை பத்திரப்பதிவு அலுவலகம் தொடர்பாக லஞ்சப் புகார் விசாரணை நடத்தக் கோரிக்கை சம்பந்தப்பட்டவர் பேட்டி!!

பொள்ளாச்சி
வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சியைச் சேர்ந்த ரகுமான் என்பவர் ஆனைமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவுப் பணிகள் தொடர்பாக லஞ்சம் பெறப்பட்டதாகக் குற்றம்சாட்டி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது அவர் கூறியதாவது
கடந்த 2024-ஆம் ஆண்டு எனது பெற்றோரின் பெயரில் இருந்த சொத்து எனது பெயருக்கு கிரையம் செய்து வழங்கப்பட்டது. இதற்கான பத்திரப் பதிவுப் பணிகளைப் பொள்ளாச்சியைச் சேர்ந்த தஞ்சை முருகேசன் என்பவர் மூலம் மேற்கொண்டேன். அப்போது ஆவணங்களைச் சரிசெய்வதற்காக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது.

பின்னர் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் சில பிழைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றைச் சரிசெய்து தருமாறு கேட்டபோது சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும் எந்தப் புகாரும் அளிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டது. தொடர்ந்து இதற்காக ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து ரூ.30 லட்சம் கடன் பெறுவதற்காக அடமானப் பத்திரப் பதிவு (MOD) மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதற்காக அண்மையில் ரூ.3 ஆயிரம் வழங்கினேன். ஆனால் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு எவ்விதக் காரணமும் தெரிவிக்காமல் அந்த MOD பதிவு திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து நேரில் சென்று கேட்டபோது எங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கூறி மீண்டும் ரூ.3 ஆயிரம் பெற்றுக்கொண்ட பின்னரே ஆவணங்கள் சரிசெய்யப்பட்டன.

தமிழகத்தில் லஞ்சமில்லாத ஆட்சி நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில் கீழ்மட்டத்தில் செயல்படும் சிலரால் இதுபோன்ற லஞ்சப் புகார்கள் எழுவது வேதனையளிக்கிறது. எனவே ஆனைமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் லஞ்ச முறைகேடுகள் குறித்து உரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரகுமான் தனது பேட்டியில் வலியுறுத்தினார்.

இச்செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சம்பந்தப்பட்ட நபர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றன. அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து உரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்பதே எங்களது நோக்கம். சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் தரப்பில் விளக்கம் பெறப்பட்டால் அதற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். எந்தவொரு தனிநபரின் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவது எங்களது நோக்கமல்ல உண்மைத் தகவல்களை நடுநிலையுடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களது கடமை.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-STAR M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts