கோவையில் முதியோர் பாதுகாப்பு, இணையவழி மோசடி தடுப்பு மற்றும் தலைமுறை இடைவெளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

கோவை அவிநாசி சாலையில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில், மூத்த குடிமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக அல்சைமர் நோய் விழிப்புணர்வு மற்றும் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் ஸ்வர்கா பவுண்டேஷன் இணைந்து நடத்திய இதில், தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளி அதிகரிப்பால் ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினருக்கும் முதிய உறவினர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளியைக் குறைத்து, அவர்களிடையே அன்பு, புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதையை வளர்ப்பதன் அவசியம் குறித்தும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேவ் ஆதிவேல்,மற்றும் சுர்ணலதா ஆகியோர் பேசினர்.. .

இதில், முதியவர்கள் இணையவழி மோசடிகளில் சிக்காமல் தற்காத்துக் கொள்வது, கைப்பேசி மற்றும் மின்னணு சாதனங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது, சந்தேகத்திற்குரிய அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அடையாளம் காண்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இணையவழிப் பணப் பரிவர்த்தனைகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதன் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts