விடுதியில் குளிக்க தண்ணி இல்லாமல் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அடி குழாயில் குளிக்கும் சமூகநீதி மாணவர்கள்!!

விளாத்திகுளம் அருகே சமூகநீதி மாணவர் விடுதியில் குளிக்க தண்ணி இல்லாமல் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அடி குழாயில் குளிக்கும் மாணவர்கள்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.தங்கம்மாள்புரம் கிராமத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது, இப்பள்ளியில் அக்கிரம சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு சமூக நீதி விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர், அதேபோல் மாணவிகள் விடுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சமூக நீதி மாணவர் விடுதி மற்றும் மாணவிகள் விடுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக முறையான தண்ணீர் வசதி இல்லாததால், மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் குளிக்க முடியாமலும் கழிவறை செல்ல முடியாமலும், தங்களின் துணிகளை துவைக்க முடியாமலும், தாங்கள் சாப்பிட்ட சாப்பாட்டு தட்டுகளை கூட கழுவ போதிய தண்ணீர் இல்லாமலும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை தினந்தோறும் சந்தித்து வருகின்றனர்.

மாணவ மாணவியரின் விடுதிகளுக்கு முறையான தண்ணீர் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அக்கிரம மக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விளாத்திகுளம் வட்டாட்சியர் மற்றும் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையாக மனு அளித்தனர், அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் விடுதிகளுக்கு முறையான தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர்.

இந்த நிலையில் தற்போது வரை முறையாக விடுதிகளில் தண்ணீர் இல்லாத காரணத்தினால், மாணவர்கள் விடுதியில் இருந்து 1 கிலோமீட்டர் நடந்து சென்று ஊரின் கண்மாய் கரையில் உள்ள அடிகுழாயில் தண்ணீர் அடித்து அங்கேயே குளித்துவிட்டு துணிகளையும் அடிகுழாயில் அலசி விட்டு,கழிவறை செல்வதற்கும் தங்களின் உணவு தட்டுகளை அலசுவதற்கும் வாலிகளில் தண்ணீரை எடுத்து விடுதிக்கு நடந்து செல்லும் அவல நிலை தினந்தோறும் தொடர்ந்து வருகிறது.
கே.தங்கம்மாள்புரம் கிராமத்தில் உள்ள அரசு சமூக நீதி விடுதியை கடந்த 2025-ம் ஆண்டு சுமார் 47 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு செய்யப்பட்டது, அவ்வாறு சீரமைக்கப்பட்டும் முறையான தண்ணீர் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கண்மாய் கரையில் உள்ள உள்ள அடிகுழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக, மாணவர்கள் சுமார் 1 கிலோ மீட்டருக்கு நடந்தே சென்று குழாயில் தண்ணீர் பிடிப்பது மாணவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படுத்துவதாகவும்,அதேபோல் கன்மாயில் தற்போது தண்ணீர் இல்லை அதிக அளவில் தண்ணீர் வந்தால் மாணவர்கள் கண்மாயில் இறங்கி குளித்து விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது, எனவே மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக விடுதிகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள், மாணவ மாணவிகளின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts