இந்து மதத்தை சேர்ந்த மக்கள் கொண்டாடும் பண்டிகைகளிள் முக்கிய பண்டிகையாக இருக்கும் தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 24 அன்று நாடு முழுவதும் கொண்டாட இருக்கிறார்கள்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பண்டிகையை முன்னிட்டு பல கோடிகளில் வர்த்தகம் நடைபெருகிறது. மக்கள் அனைவரும் அவர்களின் தகுதிக்கு எற்றார்போல் ஆடைகள், காலணிகள், பெண்களின் அலங்கார பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் வங்கி மகிழ்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் இந்து முன்னனி அமைப்பை சேர்ந்த கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்சக்தி வயது 31, இவர் கரூர் வேங்கமேட்டை சேர்ந்தவர். இவர் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நடத்தும் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள்.
கம்ப்யூட்டர் முதல் கறிவேப்பிலை வறை இந்து கடைகளில் மட்டும் வாங்குங்கள் என்று சமூக வலைதளங்களிலும், துண்டு பிரசுரம் விநியோகித்து மதக்கலவரம் தூண்டியதாக சக்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-செய்யத் காதர், குறிச்சி.