உணவு தட்டுப்பாட்டால் பகல் நேரங்களில் எஸ்டேட் பகுதிகளில் உலா வரும் யானை கூட்டங்கள்!!
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள நடுநிலை எஸ்டேட் பகுதியில் பகல் நேரங்களில் யானை கூட்டம் உலா வந்து மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகின்றன. காடுகளில் யானைக்கு தேவையான உணவுகள் கிடைக்காத காரணத்தினால் அவை காட்டை விட்டு வெளியேறி மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு வந்து ரேஷன் கடை மளிகை கடை ஆகியவற்றை உடைத்து அதன் உள்ளே இருக்கும் உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டும் மிதித்தும் நாசப்படுத்தி வருகின்றன.
யானைகள் விரும்பி உள்ள பலா வாழை போன்றவற்றை மக்கள் வளர்ப்பதினால் அதைத் தேடி யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகின்றன.மேலும் அரசியின் வாசனையை பிடித்தும் குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகின்றன.எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.
காடுகளுக்குள் யானைகள் விரும்பி உண்ணும் உணவுப் பொருள்கள் கிடைக்குமாறு செய்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.