குமரி பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஜ.டி.யு.சி சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!!
கன்னியாகுமாரி பூதப்பாண்டி ஏ.ஐ.டி.யு.சி.யுடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் 21000, அவுட்சோர்சிங் திட்டத்தை கைவிட கோரியும் ,அரசாணை 152ஐ இரத்து செய்ய கோரியும் பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி.சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திர்க்கு பி.நாகராஜன் தலைமை வகித்தார்.தோழியர்கள் எம்.லீலா ,சுசீலா, ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஏ.ஐ.டி.யு.சி.யின் மாவட்டச் செயலாளர் தோழர் ஜி.சுரேஷ்மேசியதாஸ் ஆர்ப்பாட்ட போராட்டத்தை துவக்கி வைத்தார்.உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.இசக்கிமுத்து, பொருளாளர் ஆர்.கே.சிரிகுமார் ,இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் எஸ்.ராஜீ ,இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தோழர் எஸ்.நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நாகர்கோவில் மாநகர செயலாளர் தோழர் ஆர் இசக்கிமுத்து, மின்வாரிய ஏ.ஐ.டி.யு.சி.பொறுப்பாளர் ஆர்.சிவகுமார் ,இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தோவாளை தாலுகா செயலாளர் தோழர் எஸ்.கல்யாணசுந்தரம், ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
இநதிய கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் தோழர் தா.சுபாஷ் சந்திர போஸ் போராட்ட கோரிக்கை குறித்து விளக்கிபேசினார்.
நிகழ்ச்சி முடிவில் ஏ.ஐ.டி.யு.சி.மாவட்டத்தலைவர் தோழர் எஸ்.அனில்குமார் போராட்டத்தை முடித்து வைத்தார்.ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர் இறச்சக்குளம் நயினார் ஆசாரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நாகர்கோவில் மாநகர பொருளாளர் தோவாளை கே.நாகராஜன், பூதை சோமு, ஏ.ஐ.டி.யுசி காளிமுத்து, பூதலிங்கம்,தங்கம் உள்ளிட்ட பெருந்திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.