தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தொகுதியில் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முதலூர் ஊராட்சி ஆத்திக்காடு கிராமத்தில் தொலைக்காட்சி நிலைய கட்டடம் மோசமான நிலையில் உள்ளது.
இந்து தேசிய கட்சி தூத்துக்குடி மாவட்ட தலைவர் KJ சிங் கூறுகையில் :
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முதலூர் ஊராட்சி ஆத்திக்காடு கிராமத்தில் தொலைக்காட்சி நிலைய கட்டிடம் கடந்த 30 வருடம் பழமையான பொதுமக்களுக்கு பயன்பாடின்றி மேலும் அந்த கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் இடிந்து விழும் நிலையில் மற்றும் குழந்தைகள் பெண்கள் பொதுமக்களுக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். ஆகவே இக்கட்டிடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் ஒப்புதலுடன் அகற்றி தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது அதிக காற்று வீசி வருவதுடன் மழை காலம் தொடங்க உள்ளதால் மிகவும் மோசமான நிலையில் உள்ள கட்டிடம் மழை நீரில் முற்றிலும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலை உள்ளது எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று இந்து தேசிய கட்சி தலைவர் சிங் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.