இம்மானுவேல் சேகரனாரின் 66 ஆவது வீரவணக்க நிகழ்வு சென்னை நிருபர் சங்கத்தில் நடைபெற்றது. இம்மானுவேல் சேகரனாரின் 66 ஆவது வீரவணக்க நிகழ்வு சென்னை நிருபர் சங்கத்தில் நாம் தமிழர் கட்சி பழங்குடியினர் பாசறைத் மாநிலத் தலைவர் கேப்டன் துரை தலைமைத் தாங்கினார். இந்நிகழ்வில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் பொதுச்செயலாளர் அ.வினோத், தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அ.வியனரசு, பொதுச்செயலாளர் பொன்னியின் செல்வன் சு.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று, தியாகியாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
இதில் ஆதித் தமிழர் விடுதலை இயக்கத்தைச் சார்ந்த க.இளஞ்செழியன், கோ.தேவராசு, த.தே.த.க. நடுவண் மாவட்டச் செயலாளர் கோ.திணேசு, துணைச் செயலாளர் க.பிரேம்குமார், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் ம.குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தியாகி இமானுவேல்சேகரனாரின் நூற்றாண்டுக் காலம் அக்டோபர் மாதம் 9 ஆம் நாளில் தொடங்குவதால் அவரின் நூற்றாண்டு விழாவை “சமூகநீதி சமவுரிமை நாள்” விழா என அறிவித்து மாவட்டந்தோறும் கொண்டாட வேண்டும், இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டு சிறப்பு விழாவாக சென்னையில் அவருக்கு முழுவுருச் சிலை நிறுவவும், பரமக்குடியில் முழுவுருவச் சிலை, நூலகம் உள்ளடக்கிய மணிமண்டபம் அமைக்க வேண்டும், தமிழ்நாட்டின் பட்டியல் இன மக்களுக்கு வெள்ளையர்களால் அனைத்து மாவட்டங்களிலும் கொடுக்கப்பட்ட 12 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை கணக்கெடுத்தும் மீட்டும் அம்மக்களுக்கு வழங்க வேண்டும்.
அண்மையில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழர் சீமான் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சில தமிழரல்லாத அமைப்பினரும் தனிநபர்களும் ஆங்காங்கே காவல் நிலையங்களில் கொடுக்கும் பொய்யான புகார்கள் மீது வழக்குத் தொடுத்து காவல் நிலையங்களுக்கும், நீதி மன்றங்களுக்கும் அழைப்பாணைக் கொடுத்து அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் இக்கூட்டம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது.
ஆகையால் செந்தமிழர் சீமான் மீதான அனைத்து பொய்வழக்குகளையும் திரும்பப் பெற உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும் என இக்கூட்டம் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறது. கூட்ட இறுதியில் த.தே.த.க. தென் சென்னை மாவட்டச் செயலாளர் பி.இராசேசுகுமார் நன்றிகூறி நிறைவு செய்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.
One Response
சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு சென்னையில் மிகப் பிரமாண்டமான வெண்கல சிலை ஒன்று நிறுவ வேண்டும்.