தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கோடியங்குளம் மேலத் தெருவை சேர்ந்த கணபதி மகன் முருகன்(51) என்பவர் புளியம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒட்டுடன்பட்டி பகுதியில் வயர்மேனாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 22 தேதி ஒட்டுடன்பட்டி கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அவரது உடலில் பய்ந்தது இதில் அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சசம்பவம் குறித்து புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த முருகனுக்கு கோசளையம்மாள் என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.