கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள கோவிந்தனூரை சேர்ந்தவர் 62 வயதான விவசாயி சிவசாமி. இவர் நேற்று காரமடை ரோட்டில் உள்ள வங்கியில் ஏ. டி. எம். மையத்தில் ரூ. 49, 500 பணம் போடுவதற்காக சென்றுள்ளார். அவருக்கு பணம் போட தெரியாததால் அருகில் நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவரிடம் விவசாயி சிவசாமி ரூ. 49, 500 பணத்தை கொடுத்து தனது மகளின் வங்கி கணக்கில் போடுமாறு கூறியுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனையடுத்து அந்த வாலிபர் பணம் போடுவது போல நடித்து ரூ. 48, 500 பணத்தை போட்டாச்சு, ரூ. 1000 மட்டும் திரும்பி வந்து விட்டதாக கூறி பணத்தை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். வீட்டிற்கு சென்ற சிவசாமி தனது மகளை தொடர்பு கொண்டு பணம் வந்து விட்டதா என கேட்டார். அதற்கு அவர் வரவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த சிவசாமி வங்கிக்கு சென்று கேட்டபோது கணக்கை ஆய்வு செய்த அதிகாரிகள் பணம் செலுத்தப்படவில்லை என கூறினர். உதவி செய்வது போல நடித்து வாலிபர் ஏமாற்றியதை உணர்ந்த விவசாயி இதுகுறித்து நேற்று மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ. டி. எம். மையத்தில் பணம் போடுவது போல நடித்து விவசாயிடம் ரூ. 48, 500 பணத்தை ஏமாற்றி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.