தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட தருவைக்குளம் ஊராட்சியில் அனந்தமாடன் பச்சேரி மேல அரசடி ஊராட்சியில்
மேல அரசடி, A.குமாரபுரம் மற்றும் மேல மருதூர் கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய் ப்பு உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் பொதுமக்கள் பணிபுரியும் இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சாலை, தெரு விளக்கு, குடிநீர், வடிகால் பள்ளி கட்டிடம் சீர் அமைப்பு ,இலவச பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர் . பொதுமக்களின் கோரிக்கையை அனைத்தும் உடனே நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என சண்முகையா எம்.எல்.ஏ உறுதியளித்தார். தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை பெறாத மகளிர்க்கு மேல் முறையீடு செய்வதன் மூலம் மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் சிவபாலன் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா பணி மேற்பார்வையாளர் பரமசிவன் துணை வட்டாட்சியர் ஸ்டாலின் ஒன்றிய கவுன்சிலர் தெய்வரானி ஞானசேகர் தருவைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் காடோடி மேல அரசடி ஊராட்சி மன்ற துணை தலைவர் ராமர் ஊராட்சி செயலர் பழனி முருகன்
மாணவரணி கிருஷ்ணமூர்த்தி இளைஞரணி மாயகிருஷ்ணன் அனந்தமாடன் பச்சேரி கிளை செயலாளர் பாலமுருகன் கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் தொண்டரணி கோபால் கிளைச் செயலாளர் இளங்கோ மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி.