மதுரையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள இலவச வேஷ்டிகளை திருடிய நில அளவையாளர் கைது!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வடக்கு வட்டாட்சியர் அலுவலக கருவூலத்தில் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் இலவச வேஷ்டி, சேலைகள் வைக்கப்பட்டிருந்தன.இந்தக் கருவூலத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி ரூ.15 லட்சம் மதிப்பிலான 12,500 வேஷ்டிகள் திருடப்பட்டன.

 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் 4 பேரை ஏற்கெனவே கைது செய்த போலீஸார், வேஷ்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான நில அளவையாளர் சரவணனை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில், தஞ்சாவூரில் பதுங்கியிருந்த சரவணனை (48) தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில் சரவணணின் 3 வங்கி கணக்கினை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். மேலும் நிரந்தர பணி நீக்கம் செய்வதற்காக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

– தமிழரசன், மேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp