மக்களின் கோரிக்கை நாளைய வரலாறு செய்தியின் எதிரொலி..! மீண்டும் வால்பாறையில் சிறப்பு முகாம்…

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த நாட்களில் உயிர்காக்கும் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குதல், மகளிர் குழுவிற்கு கடனுதவி வழங்குதல், சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு கடனுதவி வழங்கும் முகாம் நடைபெற்றது.

இந்நிலையில் முகாமில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தாலும் பொதுமக்கள் உரிய ஆவணங்களை கொண்டு வராத காரணத்தாலும் மேலும் ஒரு சில காரணத்தால் பெரும்பாலானோர் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்கள் மீண்டும் ஒருமுறை முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

கோரிக்கையை ஏற்று வருகின்ற 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை வால்பாறை பகுதியில் மீண்டும் முகாம் நடத்தப்படுவதாக பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மக்களின் கோரிக்கை மற்றும் நமது செய்தியின் எதிரொலியாகவும் வால்பாறையில் உடனடியாக முகம் நடத்துவதற்கு பரிந்துரை செய்த பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்களுக்கும் மேலும் உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் வால்பாறை பொதுமக்களின் சார்பாக நாளைய வரலாறு பத்திரிக்கை பாராட்டுகிறது.

பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கூறுகையில்; வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பொதுமக்கள் வியாபாரிகள் ஆட்டோ வேன் ஓட்டுநர்கள் சிறு குரு தொழில் செய்ய விரும்புபவர்கள் மகளிர் குழு மூலம் கடனுதவி பெறுவோர் தமிழக முதல்வரின் உயிர் காக்கும் மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுவோர் தவறாமல் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

-P.பரமசிவம், வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp