தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பாஜரில் ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் பிப்ரவரி 16 ல் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. 10 ஆண்டு பாஜகவின் இருண்ட கால ஆட்சிக்கு விடை கொடுப்போம் வருஷம் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தொடர்பு பெற்று கூறி ஏமாற்றி விட்டது ஒன்றிய அரசின் திட்டங்களில் 7.5 லட்சம் கோடி ஊழல் என சிஏஜி அறிக்கை கூறுகிறது. வரலாறு காணாத விலைவாசி உயர்வு பெட்ரோல் டீசல் விலை உயர்வு இவற்றை உயர்த்தி 33.4 லட்சம் கோடி கொள்ளை , 4 4 லட்சம் கோடி அரசு சொத்துக்களை விற்று அதானி அம்பானி வங்கி கடன் 25 லட்சம் கோடி தள்ளுபடி என ஒன்றிய அரசு செய்து வருகின்றனர்.
எதிர்கால தலைமுறையினர் வாழ்க்கையை பாதுகாக்க அகில இந்தியா பந்த் வேலை நிறுத்தம் பிப்.16 தேதிகளில் நடைபெறுகிறது அனைத்து தொழிற்சங்க விவாசயி சங்கம் கலந்து கொள்கிறது. வேளாண் சட்டத்தையும் உதய் மின் திட்டங்களை திரும்ப பெற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது விலைவாசி உயர்வு கட்டுபடுத்து , தேசிய குறைந்தபட்சம்
ரூ 26000 என நிர்ணயம் செய் , மின்சார சட்ட திருத்தம் மசோதா 2022 ஐ திரும்பப் பெற வேண்டும், 100 நாள் வேலை திட்ட நாட்களை 200 நாட்களாக உயர்த்தி ரூபாய் 600 வழங்கிட வேண்டும், பொதுத்துறை அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மையமாகக் கூடாது புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரியை நீக்கி கலால் வரியை குறைத்து பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் lpf செல்வ பெருமாள் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் காசி, ஏஐடியூசி அசோக்குமார், மகாராஜன், ஐஎன்டியூசி முத்து ஆகியோர் துவக்கஉரை ஆற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் வாழ்த்துரை வழங்கினார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு உறுப்பினர் செல்வராஜ் ராஜாமணி, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.