கோவை சூலூர் அடுத்த பொம்மாண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கதிர்வீச்சு தொழிற்சாலையை மூட வலியுறுத்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை சூலூர் அடுத்த பொன்னாண்டம்பாளையம் பகுதியில் மோகன் குமார் என்ற விவசாயிக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகில் அட்டாமிக் என்.டி.டி.சர்வீஸ் என்ற பெயரில் கதிர்வீச்சு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு காரணமாக அப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்களுக்கு கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக புகார் அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கணியூர் ஊராட்சி மன்ற தலைவர், சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர், கோவை மாவட்ட ஆட்சியர், கருமத்தம்பட்டி காவல்துணை கண்காணிப்பாளர், கணியூர் மாசு கட்டுப்பாட்டு வாரியம்,சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு தரப்புகளில் புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்துள்ளது.
இதை அடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத் தலைவர் பாபு தலைமையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் திடீரென அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுவை பெற்றார்.தகவல் அறிந்து வந்த ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.இதையடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.
அப்போது பேசிய விவசாயிகள் கூறும்போது :
பெரிய ஆலைகளுக்கு அனுப்பப்படும் இரும்புகளை ஸ்கேன் செய்யும் கதிர்வீச்சு தொழிற்சாலை தங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் சூழலில் அதனால் விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதை அடுத்து உள்ளூர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தொழிற்சாலையை மூடுவதற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.