தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மேலபாண்டியாபுரம் ஊராட்சி கந்தசாமிபுரம் கிராமத்தில் 16.75 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகளை நேற்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அவர்கள், ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல் ரமேஷ்
ஆகியோர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், பணி மேற்பார்வையாளர் சங்கர், மாவட்ட நலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி, ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி, கிளைச் செயலாளர் ராமகிருஷ்ணன், கந்தசாமிபுரம் சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.