தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடராம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள புதியம்புத்தூரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.23.57 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட ஊரட்சி மன்ற அலுவலகத்தை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது.
இதனை மக்கள் பயன்பாட்டிற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,
மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமை செயற்குழ உறுப்பினர் செந்தூர்மணி கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் கனகரத்தினம் சுகுமார் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி வட்டச்சியார் சுரேஷ் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் செல்வக்குமார் வருவாய் அலுவலர் வசந்த குமார் புதியம்புத்தூர் ஊரட்சி மன்ற தலைவர் பழனிச்செல்லவி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.