பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் நலனுக்காக மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கோரிக்கை மனு!!

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் அரசின் பலவேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வால்பாறை மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் பரமசிவம் நீண்ட நாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல் கூரை வழியாக மழைநீர் கசிந்து வருவதால் மாணவச் செல்வங்கள் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றன. வால்பாறை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊசி மலை, சோலையார் டேம் ஆகிய பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்ய வேண்டும்.

இப்பகுதியில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் இன்னும் சில கோரிக்கைகளை வைத்து அதை செய்து கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் அவர்களுக்கு சால்வே அணிவித்து பாராட்டுக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொண்டார் மேலும் நீண்ட நாட்களாக தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சமவெளி பகுதிகளில் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சாலைகள் மற்றும் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான இடங்களை கையகப்படுத்தி அதன் உரிமையாளருக்கு அன்றைய அரசின் நிர்ணயிக்கும் தொகையை கொடுத்து அந்த இடத்தில் சாலைகள் அரசு அலுவலகங்கள் கட்டப்படுகிறது.

ஆனால் தனியார் எஸ்டேட் பல வருடங்களாக குத்தகைக்கு எடுக்கப்பட்டு இன்றைய அளவு இந்த இடங்களுக்கு பட்டா கிடையாது. சாலைகள் சரி செய்யாமல தோட்டத் தொழிலாளர்கள் மருத்துவ உதவி பெறாமல் மிகவும் சிரமப்படுகின்றன. அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றன. சொந்த ஊரில் வாழ்வாதாரத்தை இழந்து நான்கு மற்றும் ஐந்து தலைமுறையாக எஸ்டேட் குடியிருப்பில் குடியிருந்த பணி ஓய்வு பெற்ற பின்பு நடு தெருவில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க எஸ்டேட் பகுதியில் உள்ள சாலைகளையும் அரசு சரி செய்து தர வேண்டும் வீடு இல்லாதவர்களுக்கு அரசின் புறம்போக்கு இடங்களோ அல்லது வால்பாறைக்கு அருகில் உள்ள எஸ்டேட் நிலங்களை கையகப்படுத்தி இடம் ஒதுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.

இவ்விழாவில் பொள்ளாச்சி சார் ஆட்சியாளர், மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் வால்பாறை வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் வால்பாறை தி மு க நகரச் செயலாளர் சுதாகர் என்ற குட்டி,நகர மண்ட தலைவர் திருமதி அழகு சுந்தரவல்லி, துணைத் தலைவர் செந்தில்குமார் நகர மன்ற உறுப்பினர்கள் வால்பாறை தி மு க கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp