“சங்கடகர சதுர்த்தியை” முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிமூல கணபதிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அருகம்புல், வெள்ளை எருக்கம் பூ மாலை சாற்றப்பட்டு அலங்கார தீபாரதனை கட்டப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த விசேஷத்தனமான சங்கடஹரா சதுர்த்தி தினத்தன்று விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் நீங்கும் என்ற ஐதீகம் இருப்பதால், இதில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டு விநாயகருக்கு கொழுக்கட்டை, அருகம்புல், சுண்டல் உள்ளிட்டவைகளை படைத்து தரிசித்து சென்றனர். மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பொரி, பூ உள்ளிட்டவை பிரசாதங்களாக வழங்கப்பட்டன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.