கடந்த ஆண்டு பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு நூறு சதவீதம் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கிடக் கோரி 12-08-2024 தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் டி ரவீந்திரன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் மாவட்ட தலைவர் ஆர் ராகவன் முன்னிலையிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் போராட்ட களத்திற்கு நேரில் வந்து விவசாயிகளிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர். தமிழ்நாடு விவசாய சங்க போராட்டத்தின் எதிரொலியாக இப்கோ டோக்கியோ பயிர் இன்சூரன்ஸ் நிறுவனம் முதல் கட்டமாக 1,34,980 ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்யதிருந்த 34228
விவசாயிகளுக்கு ரூ.61.20 கோடியும்,29802 ஏக்கரில் பாசிப்பயிறு சாகுபடி செய்திருந்த 11901 விவசாயிகளுக்கு ரூ.17.36 கோடியும்,ஆக மொத்தம் ரூ.78.56 கோடியை இன்று அறிவித்துள்ளது.
இந்த பணம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் அறிவித்தனர். 1.5 லட்சம் ஏக்கரில் மக்காசோளம் சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு ரூ.92 கோடி இன்னும் 15 தினங்களில் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். மூன்று பயிர்களுக்கு ரூ.170.56 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் பி சீனிவாசன் ஏ பாலகிருஷ்ணன் ஐ கணபதி எஸ் செல்வராஜ் எஸ் நடராஜன் பி மணி ராமசுப்பு கிரேசி பாலம்மாள் மற்றும் விளாத்திகுளம் ஓட்டப்பிடாரம் கயத்தார் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளும் கலந்து கொண்டனர்….
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.