தமிழகம் முழுவதும் அமைந்துள்ள திருக்கோவிலூரில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகள், அலுவலகங்கள், கடைகள், தூய்மைப்படுத்தி, மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்து, பூக்கள், பழங்கள் வைத்து, தாங்கள் செய்யும் தொழிலை தெய்வமாக பூஜித்தும், சரவஸ்வதியை பூஜித்தும் வழிபட்டு வருகிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நாளில் தங்களது தொழிலுக்குப் பயன்படும் கருவிகள், போன்றவற்றை வைத்து இறைவழிபாடு செய்யப்படுவது வழக்கம் அதன்படி சரஸ்வதி பூஜை விழா தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உற்சாகமாகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.
இதில் கொலு அமைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூஜை நடைபெற்றது இதில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சரஸ்வதி வெள்ளை பட்டுப்புடவையில் அமர்ந்து கையில் வீணை வைத்ததும் அமர்ந்திருந்தார் அந்த தெய்வத்திற்கு மற்றும் பலவிதமான பழங்கள், சுண்டல், பொரிகடலை, அவுல் , உள்ளிட்டவற்றை பூஜையில் வைத்து தீபாராதனையை அர்ச்சகர் காண்பித்து வழிபாடு நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.