எட்டயபுரத்தில் ஆட்டோ பேரணி மற்றும் வீடு வீடாக சென்று ஸ்டிக்கர் ஒட்டிய த.வெ.கவினர்!!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின், வெற்றித்தலைவர் மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் தளபதியார் ஆணைக்கிணங்க கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர், பிரவின்குமார் மற்றும் மணிகண்டன் தலைமையில், எட்டயபுரம் நகர தலைமை பொறுப்பாளர் R.S.R.மணி முன்னிலையில் மதுரையில் நடைபெறும் த.வெ.க இரண்டாம் மாநில மாநாட்டிற்கு பொதுமக்களை வரவேற்கும் விதமாக ஆட்டோக்களில் விளம்பர பதாகைகள் ஒட்டியும்,கழக கொடிகள் கட்டியும் எட்டயபுரம் நகரை ஊர்வலமாக வந்து மக்களுக்கு மாநாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் ஊருக்கு ஊர், வீதிக்குவீதி,வீட்டுக்கு வீடு வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற வாசகம் உள்ள ஸ்டிக்கர் பொதுமக்களின் ஒவ்வொரு வீடுகளிலும் த.வெ.க நிர்வாகிகளால் ஒட்டபட்டது.

இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள், இளைஞரணி,மகளிரணி, ஆட்டோ சங்க அணி மற்றும் சிந்தலக்கரை கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts