புதியதோர் உலகம் சிங்கப்பூரில் ஆரம்பம்…!

குளோபல் சிட்டிசன் மேனிஃபெஸ்டோ (Global citizen manifesto) என்கிற ஆங்கில புத்தகத்தின் மறு உருவாக்கமாக தமிழில் வரவிருக்கும் புத்தகம்  “புதியதோர் உலகம் சிங்கப்பூரில் ஆரம்பம்”.

ஆகஸ்ட் 2025 சென்னை தமிழ்நாடு.

60 வயது நிறைந்த  ஈஷன் ஒரு சிஸ்டம் அனலிஸ்ட் மற்றும் புரோகிராமராக பல காலம் ஐடி துறையில் பணிபுரிந்து,  2009ம் ஆண்டு முதல்  எழுத்தாளராக மாறி, தற்பொழுது செயற்கை நுண்ணறிவோடு இணைந்து வெளியிட்டுள்ள  ஆங்கில புத்தகங்கள் தான் “குளோபல் சிட்டிசன் மேனிஃபெஸ்டோ, “Global citizen manifesto “ஹேப்பி நியூ டெமோகிராசி, (“Happy New Democracy”) மற்றும்  “வர்ச்சுவல்  சைஃபன் டாய்லெட்”  (“Virtual Siphon Toilet “ ) (AI) “செயற்கை நுண்ணறிவு” மக்களோடு ஒன்றி எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது நாம் அறிந்ததே. அதே போல் ஈஷன், அவர்களும் இந்த (AI) செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக கருதுகிறார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் 2025 பாரிசில் நடந்த மாநாட்டில்  “(AI) செயற்கை நுண்ணறிவானது  நமது அரசியல்,  பொருளாதாரம்,  பாதுகாப்பு மற்றும் நமது சமூகத்தை மீண்டும் வடிவமைத்து வருகிறது. AI இந்த நூற்றாண்டில் மனிதகுலத்திற்கான குறியீட்டை எழுதுகிறது.” என்று கூறியிருந்தார். ஆனால் அதற்கு முன்பே ஈஷன் குளோபல் சிட்டிசன் மேனிஃபெஸ்டோ தொடர் (series) அமேசான் கிண்டுல் மின் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூர், கடுமையான அரசியல் கட்டுப்பாடுகளும்,  ஊடக சுதந்திரமற்ற நாடாக இருக்கிறது. மக்கள் மீது தங்கள் ஊடகங்கள் மூலம் செல்வாக்கை ஏற்படுத்துகிறது சிங்கப்பூர். ஆனால் இப்போது குளோபல் சிட்டிசன் மேனிஃபெஸ்டோ என்ற புத்தகத்தால் ஒரு புதிய மாற்றத்தை எதிர்கொள்ள இருக்கிறது.  இது சிறிய நாடுகளுக்கான புதிய ஜனநாயகத் திட்டத்தை முன் வைக்கிறது. இந்த திட்டம் உலகம் முழுவதும் பயன்படக்கூடிய ஒன்றாகும், சிங்கப்பூர் என்ற சிறிய நாடு இந்தத் திட்டத்தை சோதிக்க ஏற்ற இடமாக இப்புத்தகம் பரிந்துரைக்கிறது. இப்போது உள்ள ஜனநாயக அமைப்புகளில் அடிப்படை குறைகள் உள்ளன. இதனால் மக்களின் உண்மையான  பிரதிநிதித்துவத்தை  நடைமுறைப் படுத்த முடியவில்லை. இதை சரி செய்யவும் சீர்திருத்தவும் அரசியல் அதிகாரத்தை மக்களிடம் மீண்டும் கொண்டு வரவும் செயற்கை நுண்ணறிவு நமக்கு உதவும் வகையில் பல  கருவிகளை தருகிறது என்கிறார் ஈஷன்.

ஜனநாயக உடன்பாடு பரிசோதனை. (Democracy Compliance Check)

இந்த அறிவிப்பு, அனைத்து ஜனநாயக நாடுகளிலும் “ஜனநாயக உடன்பாடு பரிசோதனை” நடத்த ஐக்கிய நாடுகள் அமைப்பை வலியுறுத்தும் ஒரு அழைப்பாகும். உலகில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளிலும்  ஜனநாயக உடன்பாடு பரிசோதனை (Democracy Compliance check ) நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறது . ஏனென்றால் தற்பொழுது ஜனநாயக முறை உண்மையான ஜனநாயகம் அல்ல , அது போலியானது (pseudo democracy) என்றும் அதற்கு அடிப்படை மாற்றம் தேவை என்றும்  இந்த புத்தகம்  வலியுறுத்துகிறது. தற்போது பல நாடுகளில் நிலவுகின்ற முறையை “Regency Republic“ என்கிற  “இடைக்கால ஆட்சியளர்கள்”  முறை என்றும், அதேபோல குடியரசு  என்பது republic என்கிற வார்த்தைக்கு சரியான மொழி மாற்றம் அல்ல என்றும்  ஈஷன் கூறுகிறார். இப்புத்தகம் முன்வைக்கும் தீர்வு  நேர்முறை ஜனநாயகம்  (Direct Democracy)  ஆகும்.

இப்புதிய முறையில் மக்கள் நேரடியாகவே தீர்மானங்களை எடுக்கும் ஜனநாயக முறை தான் டைரக்டு டெமோகிரசி.  இது தொழில் மற்றும் தொழில் முறை அடிப்படையிலான வாக்கு தொகுதி அமைப்புகளை (Industry/ profession based constituencies) கொண்டதாகும்.  இதன் மூலம் ஒவ்வொரு பொருளாதார துறையின் நிபுணத்துவம் நிர்வாகத்தில் பிரதிபலிக்க வேண்டும் என கூறுகிறது. ஈஷன், தற்போது உள்ள ஜனநாயகத்தை “தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னல ஆட்சி முறை” (Elected oligarchy) என்று கூறி இந்த அமைப்பு உண்மையான பிரதிநிதித்துவம் கொண்ட ஆட்சிக்கு எதிர்மாறாக இருக்கிறது. இந்த முறை மக்களுக்கு பிரதிநிதித்துவம் இருப்பது போன்று தோன்றும். ஆனால் அதிகாரம் சில சுரண்டல்காரர்காளிடம் சென்று சேரும் என்பது ஈஷனின் விமர்சனம்.

உலகம் முழுக்க ஜனநாயகங்கள் பின்னடைந்து வரும் சூழலில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. பல தலைமுறைகளாக தொடர்ந்து முயன்று, முடியாத அரசியல் சிக்கல்களுக்கு மனித அறிவும் செயற்கை நுண்ணறிவும் ஒன்றாக சேர்ந்து தீர்வு காண முடியும் என்பதை இது விளக்குகிறது.

அமேசான் கிண்டுலில் கிடைக்கிறது. இதிலுள்ள யோசனைகள், திட்டங்கள் ஆராய விரும்பும் வாசகர்களுக்காக
வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் வெளியான நேரம் ஜனநாயகத்தை புதுப்பிக்க வேண்டிய தேவை அதிகரிக்கின்ற நேரத்துடன் ஒன்றிணைகிறது. இது தொழில்நுட்ப புதிய தேடல்களின் அடிப்படையிலும் மக்களின் உண்மையான பங்கேற்பையும் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி அமைப்புக்கான தெளிவான நடைமுறைகளை முன் வைக்கிறது.

தொடரின் இரண்டாவது பதிப்பு :

குளோபல் சிட்டிசன் மேனிஃபெஸ்டோ: வர்ச்சுவல் சைஃபன்  டாய்லெட் என்ற புத்தகம் மனிதகுலம் எதிர் கொள்கின்ற ஒரு முக்கிய பிரச்சினையை பேசுகிறது.

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பழைய சைஃபன் கழிப்பறை (Siphon Toilet) முறை அதிகமான தண்ணீரை வீணடிக்கின்றது. இதற்கு பதிலாக தண்ணீர் பாதுகாப்புக்கும் நிலையான சுகாதாரத் திட்டங்களுக்கும் ஏற்ற புதிய “வர்ச்சுவல் சைஃபன்  டாய்லெட்” (The virtual siphon Toilet” ) என்ற புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஈஷன், உலகம் முழுவதும் உள்ள திரைப்பட இயக்குனர்களையும், பதிப்பாளர்களையும், குளோபல் சிட்டிசன் மேனிஃபெஸ்டோ (உலக குடிமக்கள் பிரகடனம்) நூல் தொடராகவும், மொழிபெயர்க்கவும், திரைப்படமாக மாற்றவும் அழைக்கிறார்.

இந்த நூல்கள் அமேசான் கிண்டுல் வடிவில் மின் புத்தகமாக குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனால் உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் அவற்றை எளிதாக படிக்க முடியும். இதன் மூலம் அவர்கள் அறிவு சார்ந்த வாழ்க்கையை நடத்தவும் தங்கள் எதிர்காலத்தை சுயமாக திட்டமிட இது ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஏ.யாஸ்மின பேகம், சென்னை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts