கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் வழிகாட்டுதலின்படி, மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை, சந்திப்பு, உறுப்பினர் புதுப்பித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில செய்தி தொடர்பாளர் ரகமத்துல்லா, வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழு கந்தரவகோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி வேலாடிப்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளிகள் புதுநகர், கோமாபுரம், குளத்தூர் நாயக்கர், பட்டி,துவார், ஆத்தங்கரை விடுதி, பல்லவராயன் பட்டி கோமாபுரம், நடுநிலைப் பள்ளிகள் அக்கச்சிப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மெய்குடிப்பட்டி, கெண்டையம்பட்டி, பல்லவராயன் பட்டி, நடுப்பட்டி,கொத்தகப் பட்டி உள்ளிட்ட அரசு நடுநிலை , உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2025 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் சந்தா புதுப்பித்தல், சேர்த்தல், உறுப்பினர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அனைத்து ஆசிரியர் பெருமக்களும் தங்களுடைய உறுப்பினர் சந்தாவை புதுப்பித்துக் கொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்பது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இயக்கம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சாதனைகளாக 53,000 ஆசிரியர் பெருமக்களுக்கு தொகுப்பூதியத்தை ஒழித்து காலம் முறை வரை ஊதியம் பெற்று தந்தது, ஊதிய குழுவில் 1.86 பெற்று தந்தது, உயர்கல்வியில் எம்.பில் படிப்புக்கு ஊக்க ஊதியம், பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆணையர் பணியிடத்தை ரத்து செய்தது, தொடக்க கல்வித் துறையில் வரலாற்று சிறப்புமிக்க அரசாணை எண் 243 பெற்றுத் தந்து முறைப்படியான பதவி உயர்வை உறுதி செய்தது, கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட சரண்டர் விடுப்பை பெற்று தந்தது, சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நீடிப்பு பெறும் பொழுது அவர்களுக்கான ஊதியத்தை 10% பிடிக்கக் கூடாது என ஆணை பெற்று தந்தது, அலகு விட்டு அலகு மாறுதல், கொரோனா காலத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ.1,86,30,127 நிதி திரட்டி 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

முதல் திட்டமாக கரோனா பேரிடர் காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரூ.10,05,000 செலவில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 2-வது திட்டமாக பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்ட மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.25,95,000 செலவில் குளிர்பதனப் பெட்டிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் அண்ணா பிறந்த நாளான செப். 15, கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 03, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 01, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி பிறந்தநாளான நவ. 27 ஆகியவற்றை குறிக்கும் வகையில் ரூ.1,50,30,127-ஐ கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.

சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து இறந்த ஆசிரியர் பெருமக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இதுவரை இரண்டு கோடிக்கு மேற்பட்ட குடும்ப நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் அவர்களின் தொடர்பு முயற்சியினால் விரைவில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் எதிர்பார்க்கக் கூடிய பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து முழுவதும் விலக்களிக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் நலன்கள் மட்டுமல்லாமல் மாணவர் நலன், பொதுமக்கள் நலன்,சமூக நலன் சார்ந்தது தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பணியாற்றி வருகிறது. உறுப்பினர் சந்தா புதுப்பிப்பு முகாமில் நிர்வாகிகள் கண்ணன், பழனிச்சாமி, ஜெகநாதன், விமல், முனிய்யா, சங்கர், கணேஷ் பூபதி, அன்பழகன், எஸ் மணிகண்டன், முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts