குண்டும் குழியுமான சாலைகள் வாழை மரம் நடும் நூதனப் போராட்டம் – சிபிஎம் (CPM) அறிவிப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாமல் இருக்கும் சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 28-ம் தேதி வாழை மரம் நடும் போராட்டம் நடைபெறவுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறையில் உள்ள முக்கியப் பகுதிகளான சோலையார்,உபாசி, ஹை ஃபாரஸ்ட், ஊசிமலை, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி பவர் ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு சாலைகள் பல ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் சாலைகள் மோசமாக இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் நோயாளிகள் தவிக்கின்றனர் சில நேரங்களில் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
குண்டும் குழியுமான சாலைகளால் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படும் அச்சமும் முதியவர்களுக்கு உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.

அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதால் எஸ்டேட் பகுதிகளுக்குப் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்படும் சூழல் உருவாகிறது. இது போக்குவரத்து கழகத்திற்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பாக தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 28-12-2025 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணியளவில் சோலையார் சாலையில் வாழை மரம் நடும் போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

இப்போராட்டத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி செயலாளர் பி. பரமசிவம் அவர்கள் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்துள்ளார்.

கள நிலவரப்படி அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவையான சாலை வசதி இல்லாததால் மக்களின் அன்றாட வாழ்வாதாரமும் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே உள்ளது இந்தப் போராட்டத்திற்குப் பிறகாவது அரசு விழித்துக்கொண்டு சாலைகளைச் சீரமைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts