தூத்துக்குடியில் வியாபார தலங்களில் தமிழ் பெயர்களை எழுத வேண்டும் என விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது!!


தூத்துக்குடி தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் ஆட்சி மொழிச் சட்ட வாரம் 17 ந்தேதி முதல் 27 ந்தேதி வரை நடைபெறுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் இரண்டாம் நாள் வியாபார தலங்களில் தமிழ்ப்பெயர்களை எழுத வேண்டும் என கோரி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து துவங்கி பேரணியை. தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ தலைமையில் தொழிலாளர் உதவி ஆணையர் மின்னல்கொடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தபேரணி தூத்துக்குடி உதவி ஆட்சியர் அலுவலகம் வழியாக கடற்கரை சென்று சேர்ந்தது. செல்லும் வழியில் வியபாரத்தலங்களில் தமிழ்ப்பெயர்களை வைக்க வேண்டும் என அறிவுருத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு. ஆட்சிமொழித் தொடர்பான வாசகங்களுடன் கூடிய பாதாகைகளை பிடித்துக்கொண்டு கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனா். பேரணி துவங்கும் முன்பு தமிழ் மொழி குறித்து மாணவர்களிடம் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் இளங்கோ துவக்கவுரையாற்றினார். இறுதியில் தமிழ் வளர்ச்சி குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, மாரிமுத்து, ஜெகஜீவன் ராம், திருக்குறள் பேரவை அன்பழகன், அய்யனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-பரணிபாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts