பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் வனம் மற்றும் வனவிலங்குகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் இன்று (13.12.2025) வனம் மற்றும் வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாணவர்கள் மத்தியில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
​இந்தக் கருத்தரங்கில் பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசினர்.

​வனம் மற்றும் வனவிலங்குகள் குறித்து இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. மா. வெற்றிவேல் அவர்கள் முக்கிய உரையாற்றினார்.
​பெண்கள் பாதுகாப்பு குறித்து அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி. கவிதா அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பறவைகள் பாதுகாத்தல் குறித்து அறக்கட்டளையின் அறங்காவலர் திரு. முருகானந்தம் அவர்கள் பேசினார். ​நீர்நிலைகள் பாதுகாத்தல் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து நீர்நிலைகள் பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

​வனமக்கள் வாழ்வியல் குறித்தும், வனம் பற்றியும், பழங்குடியினர் நலன் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திருமதி. வளர்மதி அவர்கள் விரிவாகப் பேசினார்.

இந்தக் கருத்தரங்கில் கல்லூரிப் பேராசிரியர்களான திருமதி. சுதா, திருமதி. அம்சவேணி ஆகியோர் கலந்துகொண்டனர் கல்லூரி மாணவ மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டு வனம் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அரிய தகவல்களை அறிந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts