வால்பாறை அருகே ஆற்றுநீரில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை வரட்டுப் பாறை பகுதியில் தனியாருக்கு சொந்தமான காப்பி கொட்டை எஸ்டேடில்  காப்பிக் கொட்டைகளை கழுவுவதினால் ஏற்படும் கசைவுத்தன்மை கொண்ட  அழுக்கு நீர் மற்றும் துர்நாற்றம் அப்பகுதியில் ஆற்று நீரில் கலக்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆற்று நீரில் இந்த நீர் கலப்பதினால் வனவிலங்குகள்   குடித்து விட்டு இறந்துபோகும் சூழல் உள்ளது. மேலும் அனலி எஸ்டேட் பகுதியில் ஆற்று நீரில்  இந்த நீரும் கலந்து டாப் ஸ்லிப் செல்கிறது.

வில்லோனி செல்லும் எஸ்டேட் பகுதியில் பாலத்தின் அருகே கருப்பு நிறத்தில்  சாயமாகவும் துர்நாற்றம் வீசும் தண்ணீராக மாறி உள்ளது. இதில் மீன்கள் நண்டுகள் போன்ற இதர வகை உயிரினங்கள் இந்த தண்ணீரால் இறந்துவிடு கிறது.

அப்பகுதியில் உள்ள அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கைகளும்  எடுக்கவில்லை. காடுகளில் வாழும்  விலங்குகளை காப்பாற்றுவோம் என அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இதனைக் கண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என கேள்விக்குறியாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts