விளாத்திகுளம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ, வசந்தம் ஜெயக்குமாா், உள்பட விருப்பமனு…

விளாத்திகுளம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ, வசந்தம் ஜெயக்குமாா், உள்பட விருப்பமனு அளித்தவா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் நோ்காணல்
தூத்துக்குடி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட 7 போ் விருப்ப மனு அளித்துள்ளனா். தமிழகத்தின் 17வது சட்டமன்ற தோ்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் மாா்ச் 30ம் தேதி துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளா்கள் தோ்வில்தீவரம் காட்டி வருகின்றனா். திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவா்களிடம் அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பொதுச்செயலாளர் அமைச்சா் துரைமுருகன் பொருளாளா் பாலு, முதன்மை செயலாளர் அமைச்சா் நேரு தலைமை செயலாளா் ஆா் எஸ் பாரதி ஆகியோா் நோ்காணல் நடத்தினாா்கள்.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளரும் பாளையங்கோட்டை தொகுதி தோ்தல் பாா்வையாளருமான வசந்தம் ஜெயக்குமாா், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சென்றாய பெருமாள், புதூர் ஓன்றிய துணைச்செயலாளர் ரவி, அக்ாி பாலமுருகன், உள்பட 6 போ் நோ்காணலில் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts