கோவில்பட்டியில் பைக் மீது அரசு பேருந்து மோதல் – பேருந்து சக்கரத்தில் சிக்கி தனியார் பள்ளி ஆசிரியை மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும்அவரது மகள் பரிதாபமாக உயிரிழப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச்சேர்ந்தவர் ரமேஷ்(44) அவரது மனைவி வளர்மதி(37) மற்றும் மகள் அஷ்விகா(9). வளர்மதி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அஷ்விகா தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில் இன்று மாலை ரமேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் பள்ளியிலிருந்து பைக்கில் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். பசுவந்தனை சாலையில் சென்று கொண்டிருந்த போது கோவில்பட்டியில் இருந்து முடுக்கலான்குளம் சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வளர்மதி மற்றும் சிறுமி அஷ்மிதா இருவரும் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் படுகாயம் அடைந்த ரமேஷ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் ஓட்டுநர் செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts