இந்தியா தொழில்நுட்பத்தை உருவாக்கும் நாடாக திகழ வேண்டும்!! காருண்யா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில்,மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் வணிகப் பிரிவுத் தலைவர் வேலுசாமி பேச்சு!!

கோவையில் காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முதன்மை விருந்தினராக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் வணிகப் பிரிவுத் தலைவர் மற்றும் மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமோட்டிவ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வேலுசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்..
முன்னதாக விழாவில் அவர் பேசுகையில், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொண்டு சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் தலைவர்களாக உருவாக வேண்டும் என்றும், இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாடாக மட்டுமல்லாமல், தொழில்நுட்பத்தை உருவாக்கும் நாடாகவும் திகழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வேந்தர் டாக்டர் பால் தினகரன் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு (AI) அனைத்து துறைகளிலும் வேகமான மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மாணவர்கள் அதுகுறித்த அறிவை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோர்களாக மாற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், உயர்ந்த ஒழுக்கம், மனிதநேயம் மற்றும் பொறுப்புணர்வுடன் சமூகத்திற்கு பங்களிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.









