
கோவை பீளமேடு “கோ இந்தியா” ஹாலில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் மற்றும் புனர்ஜீவன் ஆயுர்வேத நிலையம் ஆகியோர் இணைந்து இயற்கை மற்றும் யோகா புத்தகங்கள் வெளியீடு, யோகாவில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் யோகா பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விழாவில் சிவசைலம் இயற்கை உணவின் தூதுவர் டாக்டர் மு.அ. அப்பன், ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கழக செயலாளர் முத்துக்குமார், ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம் இணை செயலாளர் கணேஷ் பாபு, மண்டல செயலாளர் முத்துமாணிக்கம், ஸ்ரீ காயத்ரி இயற்கை வைத்தியசாலை சண்முகவேல், அண்ணா யுனிவர்சிட்டியின் கோவை ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவி, கோவை கலைமகள் கல்லூரியின் முதல்வர் மாலா, வணிகவரித்துறை இணை இயக்குனர் ஓய்வு கணேசன், மதுரை நகரத்தார் சங்கத்தின் துணைத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.விழாவில் அனைத்து சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பரை செய்தார் சுப்ரா யோகா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சுப்பரமணியன் நாச்சியப்பன்.இந்த விழாவின் சிறப்பாக யோகா மாணவர்களின் பல்வேறு யோகாசனங்கள் பார்வையாளர்ஙளை வியப்பி ஆழ்த்தியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.









