ஒரு மரம் இன்று ஆயிரம் நிழல்கள் நாளை – பொள்ளாச்சியில் அறக்கட்டளைகளுடன் இணைந்து நகராட்சி பசுமை முயற்சி

கோவை மாவட்டம்
பொள்ளாச்சி–கோவை சாலையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் புதிய நீதிமன்ற வளாகத்தில் சுற்றுச்சூழலைப் பசுமையாக்கும் நோக்கில் அசோகம், மகிழம், வேம்பு உள்ளிட்ட 110 நாட்டு ரக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

​நகராட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வை பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் திரு. குமரன் அவர்கள் மரக்கன்றை நடவு செய்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் பொள்ளாச்சி நகராட்சி முழுவதும் 24 மணி நேரமும் பிராணவாயு (ஆக்ஸிஜன்) வழங்கும் மற்றும் பறவைகள் கூடுகட்டி வாழ ஏற்ற நாட்டு ரக மரங்களை நகராட்சிக்குச் சொந்தமான காலியிடங்களில் தொடர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்து
வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின் ஒருங்கிணைப்புப் பொறுப்பை இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. மா. வெற்றிவேல் மேற்கொண்டார். அவரது தலைமையில் அறக்கட்டளையின் பழங்குடியினர் நலன் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திருமதி. வளர்மதி மற்றும் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சுமார் 8 அடி உயரமுள்ள 110 நாட்டு ரக மரக்கன்றுகள் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் நடவு செய்து அவற்றுக்கு முறையாகத் தண்ணீர் ஊற்றப்பட்டது.

இந்நிகழ்வில் மாயா பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. கமலக்கண்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

ஒரு மரம் இன்று ஆயிரம் நிழல்கள் நாளை என்ற உயரிய நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட இந்த பசுமை முயற்சி வருங்கால தலைமுறைக்கு இயற்கைச் செல்வமாகவும் பசுமை நிறைந்த பாரம்பரியமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை என்பது நிதர்சனமான உண்மை.

மேலும்
இந்நிகழ்வு குறித்து இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. மா. வெற்றிவேல் அவர்கள் கூறுகையில் நடப்பட்ட இந்த மரக்கன்றுகள் அனைத்தும் வெறும் மரங்கள் மட்டுமல்ல வருங்காலத் தலைமுறைக்கான சுவாசம். இவற்றை நடுவதோடு மட்டுமின்றி நகராட்சியின் ஒத்துழைப்போடு தொடர்ந்து பராமரித்து வளர்ப்பதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்தார்.

மரம் வளர்ப்போம் மழை வளம் பெறுவோம் என்ற சிந்தனையோடு
உங்கள்
செய்தியாளர்
உங்கள்
STAR M.சுரேஷ் குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts