விளாத்திகுளத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி உரிமையாளர் கைது!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் குமார் (54), இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் – சுப்பிரமணியபுரத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஐயங்கார் பேக்கரி நடத்தி வந்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பேக்கரி நடத்துவதற்காக அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார், இந்நிலையில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தி வந்துள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாய் இதைப்பார்த்தவுடன் முதியவர் குமாரை விளக்கமாத்தால் அடித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts