​வால்பாறை எஸ்டேட் சாலைகளில் புதர்கள் நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க DYFI கோரிக்கை!!

வால்பாறை ஈட்டியார் மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளின் சாலைகளில் இருபுறமும் அடர்ந்த செடி கொடிகள் மற்றும் புதர்கள் வளர்ந்துள்ளன. இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எனவே வாகன ஓட்டுநர்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு விபத்துகளைத் தடுக்கும் வகையில் சாலைகளின் இருபுறமும் உள்ள புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) செயலாளர் அகமது பாவா மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரப்பூர்வக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட கள ஆய்விலும் வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் சாலைகளின் இருபுறமும் செடிகள் ஆக்கிரமித்துள்ள உண்மை தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் பெரும்பாலான பேருந்துகளின் பக்கவாட்டுக் கண்ணாடிகள் உடைந்த வண்ணம் உள்ளன. உடைந்த கண்ணாடிகளுக்குப் பேருந்து ஓட்டுநர்களே பணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது தவறினால் நிர்வாகம் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்தில் சிக்கிப் காயமடைகின்றனர். இத்தனை பாதிப்புகள் ஏற்படும்போதும் இதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போல நெடுஞ்சாலைத் துறை செயல்பட்டு வருகிறது. இனியாவது சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விழித்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை P.பரமசிவம்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts